TNPSC Thervupettagam
June 1 , 2018 2368 days 767 0
  • விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வியாழன் கோளினுடைய சுற்றுவட்டப் பாதையில் (514107) 2015 BZ509 எனும் புதிய விண்கல்லினை கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த விண்கல்லானது வேறொடு நட்சத்திரக் கூட்டத்திலிருந்து இடம் பெயர்ந்து வியாழன் கோளினுடைய சுற்று வட்டப் பாதையில் நிலை கொண்டுள்ளது.
  • இந்த குறுங்கோளே நம்முடைய சூரிய குடும்பத்திற்கு இடம் பெயர்ந்து வந்துள்ளதாக அறியப்பட்ட முதல் நிரந்தர குறுங்கோளாகும்.

  • நம்முடைய சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களும் பெரும்பான்மையாக உள்ள மற்ற இதர பொருட்களும் சூரியனை சுற்றி ஒரே திசையில் பயணிக்கின்றன.
  • ஆனால் 2015 BZ509 என்பது வித்தியாசமானது. இது மற்றவைக்கு நேர் மாறாக பின்னோக்கிச் செல்லும் சுற்றுப் பாதையில் நகர்கிறது.
  • ஒவ்முவாமுவா என்ற சிறுகோளானது 2014 ஆம் ஆண்டு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு இதன் மீதான நான்கு வருட கண்காணிப்பிற்குப் பிறகு, ஆராய்ச்சியாளர்கள் இந்த குறுங்கோளானது சுமார்5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது நம் பூமி உருவாக தொடங்க ஆரம்பித்த சமயத்தில் நம்முடைய சூரிய குடும்பத்திற்கு வருகைப் புரிந்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
  • ஆனாலும் இது வெறும் கடந்து செல்லும் பிரயாணியைப் போலவே உள்ளது. அதே சமயம் அந்த முன்னாள் குறுங்கோளான, (514107) 2015 BZ509 என்று பெயரிடப்பட்டுள்ள வெளிமண்டல குறுங்கோளானது நீண்ட காலமாகத் தங்கியிருக்கும் கோளாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்