கேரளா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2019 ஆம் ஆண்டில் குஜராத்தில் முற்கால ஹரப்பா நெக்ரோபோலிஸ் (புதைவிட) ஜூனா காதியாவைக் கண்டறிந்துள்ளனர்.
கச் மாவட்டத்தில் உள்ள காதியா கிராமத்திற்கு அருகில் உள்ள பட்டா பெட் என்ற இடத்தில் 5,200 ஆண்டுகள் பழமையான ஹரப்பா குடியேற்றத்தினைச் சேர்ந்த மிகவும் முக்கியமான கண்டுபிடிப்புகளின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளிலிருந்து கண்டறியப்பட்ட ஏராளமான மட்பாண்டங்கள், கலைப் பொருட்கள் மற்றும் சில விலங்குகளின் எலும்புத் துண்டுகள் ஆனது, முற்கால ஹரப்பா முதல் பிற்கால ஹரப்பா காலம் வரை, அதாவது கி.மு. 3200 முதல் கி.மு. 1700 ஆம் ஆண்டு வரை இந்தப் பகுதியில் வாழ்ந்த ஹரப்பா மக்களின் தொழில்முறையைக் குறிக்கிறது.
இந்த அகழ்வாராய்ச்சியில் கால்நடை, செம்மறி அல்லது ஆடு மற்றும் உண்ணக் கூடிய சங்குகளின் ஓட்டுத் துண்டுகள் ஆகியவற்றைக் குறிக்கும் சில விலங்கு எலும்புகளின் எஞ்சியப் பாகங்கள் கண்டறியப்பட்டன.