சரக்கு மற்றும் சேவை வரி சபையின் 53வது கூட்டம் ஆனது புது டெல்லியில் ஜூன் 22 ஆம் தேதியன்று நடைபெற்றது.
நடைமேடை அனுமதிச் சீட்டு விற்பனை, ஓய்வு அறைகள் உள்ளிட்ட சாதாரண மக்களுக்கு இந்திய இரயில்வே நிர்வாகத்தினால் வழங்கப்படும் சேவைகளுக்கு தற்போது சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு வெளியே அமைந்துள்ள மாணாக்கர் விடுதிகளுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள்:
பால் கேன்கள்: அனைத்து எஃகு, இரும்பு மற்றும் அலுமினிய பால் பாத்திரங்கள் மீது 12% சரக்கு மற்றும் சேவை வரி.
அட்டைப் பெட்டிகள்: அட்டைப் பெட்டிகள், பெட்டிகள் மற்றும் காகிதப் பெட்டிகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி வரம்பு 18 சதவீதத்திலிருந்து 12% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
சூரிய சக்தியில் செயல்படும் சமையல் பாத்திரங்கள்: ஒற்றை அல்லது இரட்டை ஆற்றல் மூலம் கொண்ட அனைத்து சூரிய சக்தியில் செயல்படும் சமையல் பாத்திரங்களுக்கும் 12% சரக்கு மற்றும் சேவை வரி.
கோழி வளர்ப்புப் பண்ணைப் பயன்பாட்டிற்கான இயந்திரப் பாகங்கள்: கோழிப் பண்ணை இயந்திரங்களின் பாகங்களுக்கு 12% சரக்கு மற்றும் சேவை வரி.
துறையின் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்ய சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திற்கு 20 லட்சம் ரூபாயும், உயர் நீதிமன்றத்திற்கு 1 கோடி ரூபாயும், உச்ச நீதிமன்றத்திற்கு 2 கோடி ரூபாயும் என்ற நிதி வரம்பை சபை பரிந்துரைத்துள்ளது.