TNPSC Thervupettagam

53வது சரக்கு மற்றும் சேவை வரி சபைக் கூட்டம்

June 26 , 2024 22 days 179 0
  • சரக்கு மற்றும் சேவை வரி சபையின் 53வது கூட்டம் ஆனது புது டெல்லியில் ஜூன் 22 ஆம் தேதியன்று நடைபெற்றது.
  • நடைமேடை அனுமதிச் சீட்டு விற்பனை, ஓய்வு அறைகள் உள்ளிட்ட சாதாரண மக்களுக்கு இந்திய இரயில்வே நிர்வாகத்தினால் வழங்கப்படும் சேவைகளுக்கு தற்போது சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • கல்வி நிறுவனங்களுக்கு வெளியே அமைந்துள்ள மாணாக்கர் விடுதிகளுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள்:
    • பால் கேன்கள்: அனைத்து எஃகு, இரும்பு மற்றும் அலுமினிய பால் பாத்திரங்கள் மீது 12% சரக்கு மற்றும் சேவை வரி.
    • அட்டைப் பெட்டிகள்: அட்டைப் பெட்டிகள், பெட்டிகள் மற்றும் காகிதப் பெட்டிகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி  வரம்பு 18 சதவீதத்திலிருந்து 12% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
    • சூரிய சக்தியில் செயல்படும் சமையல் பாத்திரங்கள்: ஒற்றை அல்லது இரட்டை ஆற்றல் மூலம் கொண்ட அனைத்து சூரிய சக்தியில் செயல்படும் சமையல் பாத்திரங்களுக்கும் 12% சரக்கு மற்றும் சேவை வரி.
    • கோழி வளர்ப்புப் பண்ணைப் பயன்பாட்டிற்கான இயந்திரப் பாகங்கள்: கோழிப் பண்ணை இயந்திரங்களின் பாகங்களுக்கு 12% சரக்கு மற்றும் சேவை வரி.
  • துறையின் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்ய சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திற்கு 20 லட்சம் ரூபாயும், உயர் நீதிமன்றத்திற்கு 1 கோடி ரூபாயும், உச்ச நீதிமன்றத்திற்கு 2 கோடி ரூபாயும் என்ற நிதி வரம்பை சபை பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்