54வது முனிச் பாதுகாப்பு மாநாடு ஜெர்மனியின் முனிச் நகரத்தில் பிப்ரவரி 16 முதல் 18 வரையிலான தேதிகளில் நடத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தரேஸ் இம்மாநாட்டை துவக்கி வைத்தார்.
இந்த மாநாடு வடகொரியாவின் அணு சக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் சிரியாவின் உள்நாட்டுப் போர் ஆகிய முக்கியமான பாதுகாப்பு விஷயங்கள் பற்றி விவாதிப்பதற்காக நடத்தப்பட்டது.
இந்த மாநாடு 1963 ம் ஆண்டிலிருந்து வருடாந்திர மாநாடாக நடத்தப்படும் சர்வதேச பாதுகாப்புக் கொள்கை பற்றிய ஒரு முக்கிய மாநாடாகும்.