முதல் 54 v2.0 அல்லது Gen2 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 என்ற ஏவுகலம் மூலம் புவித் தாழ்மட்ட சுற்றுப்பாதையில் செலுத்தப் பட்டது.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, 60 ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஏவுப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது, தற்போது சுற்றுப்பாதையில் 3,604 செயல்பாட்டு ஸ்டார் லிங்க் செயற்கைக் கோள்களைக் கொண்டுள்ளது.
வருங்காலத்தில் அனுப்பப்பட உள்ள மொத்த செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை 12,000 ஆக உள்ள நிலையில் இது 42,000 ஆக அதிகரிக்கப்படும்.