TNPSC Thervupettagam

55வது சரக்கு மற்றும் சேவை வரி சபைக் கூட்டம்

December 27 , 2024 26 days 114 0
  • 55வது சரக்கு மற்றும் சேவை வரி சபை கூட்டம் ஆனது மத்திய நிதித் துறை அமைச்சர் தலைமையில் இராஜஸ்தானின் ஜெய்சல்மர் நகரில் நடைபெற்றது.
  • செறிவூட்டப்பட்ட அரிசிகள் (FRK) மீதான GST விகிதத்தை 5% ஆகக் குறைக்க இச்சபை பரிந்துரை செய்துள்ளது.
  • மரபணு சிகிச்சையில் GST வரிக்கு முழு விலக்கு அளிப்பதாகவும் அறிவித்துள்ளது.
  • சரக்குகள் அல்லது சேவைகள் ஆக வகைப்படுத்தப்படவில்லை என்பதால் செலவுச்  சீட்டுக்கள் (Vouchers) அடிப்படையிலான பரிவர்த்தனைகளுக்கு GST விதிக்கப்படாது என்று சபை தெளிவுபடுத்தியுள்ளது.
  • கடன் வழங்கீட்டு விதிமுறைகளுக்கு இணங்காததற்காக வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) விதிக்கும் அபராதக் கட்டணங்களுக்கு GST விதிக்கப்படாது.
  • இது முன்னதாக 25% ஆக இருந்த அபராதம் தொடர்பான மேல்முறையீடுகளுக்குத் தேவையான கட்டண முன் வைப்புத் தொகையை 10% ஆகக் குறைக்க முன்மொழிந்து உள்ளது.
  • அரசுத் திட்டங்களின் கீழ் இலவச விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் உணவு இடுபொருட்கள் மீதான 5% GST சலுகை விகிதம் தொடரும் என அறிவித்துள்ளது.
  • அனைத்து பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை மீதான GST விகிதம் 12 சாதவீதத்திலிருந்து 18% ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
  • சோளப்பொரி (பாப்கார்ன்) ஜிஎஸ்டியின் கீழ் உப்புத்தன்மை கொண்டதாக வகைப் படுத்தப் பட்டுள்ளதால் அதன் மீதான வரி 5% ஆகும்.
  • ஆனால், முன்கூட்டியே அடைக்கப்பட்டு விற்கப்படும் போது அதற்கான, வரி 12% ஆக அதிகரிக்கிறது.
  • இனிப்பூட்டப்பட்ட சோளப்பொரியானது சர்க்கரைசார் மிட்டாய் வகைக்குள் அடங்கும் என்பதோடு இது பொதுவாக 18% ஜிஎஸ்டி விகிதத்தை ஈர்க்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்