சமீபத்தில் 55வது உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்திரக் கூட்டம் ஆனது, சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் "Collaboration for the Intelligent Age" என்ற ஒரு கருத்துருவுடன் நடைபெற்றது.
கால்பந்து ஜாம்பவானான டேவிட் பெக்காம், ஆடை வடிவமைப்பாளர் டயான் வான் ஃபர்ஸ்டன்பெர்க் மற்றும் கட்டிடக் கலைஞர் ரிக்கன் யமமோட்டோ ஆகியோருக்கு மதிப்புமிக்க கிரிஸ்டல் விருதுகள் வழங்கப்பட்டன.
சமூக, சுற்றுச்சூழல் மற்றும் படைப்புகளின் முன்னேற்றத்திற்கான அவர்களின் பெரும் பங்களிப்புகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.
இந்த நிகழ்வில் ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய ஆறு இந்திய மாநிலங்களைச் சேர்ந்த உயர் நிலைப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சுவிட்சர்லாந்தில் உள்ள இலாப நோக்கமற்ற அறக்கட்டளையான WEF என்பது 1971 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதோடு இதன் தலைமையிடம் ஜெனீவாவில் அமைந்துள்ளது.