55வது சரக்கு மற்றும் சேவை வரி சபை கூட்டம் ஆனது மத்திய நிதித் துறை அமைச்சர் தலைமையில் இராஜஸ்தானின் ஜெய்சல்மர் நகரில் நடைபெற்றது.
செறிவூட்டப்பட்ட அரிசிகள் (FRK) மீதான GST விகிதத்தை 5% ஆகக் குறைக்க இச்சபை பரிந்துரை செய்துள்ளது.
மரபணு சிகிச்சையில் GST வரிக்கு முழு விலக்கு அளிப்பதாகவும் அறிவித்துள்ளது.
சரக்குகள் அல்லது சேவைகள் ஆக வகைப்படுத்தப்படவில்லை என்பதால் செலவுச் சீட்டுக்கள் (Vouchers) அடிப்படையிலான பரிவர்த்தனைகளுக்கு GST விதிக்கப்படாது என்று சபை தெளிவுபடுத்தியுள்ளது.
கடன் வழங்கீட்டு விதிமுறைகளுக்கு இணங்காததற்காக வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) விதிக்கும் அபராதக் கட்டணங்களுக்கு GST விதிக்கப்படாது.
இது முன்னதாக 25% ஆக இருந்த அபராதம் தொடர்பான மேல்முறையீடுகளுக்குத் தேவையான கட்டண முன் வைப்புத் தொகையை 10% ஆகக் குறைக்க முன்மொழிந்து உள்ளது.
அரசுத் திட்டங்களின் கீழ் இலவச விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் உணவு இடுபொருட்கள் மீதான 5% GST சலுகை விகிதம் தொடரும் என அறிவித்துள்ளது.
அனைத்து பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை மீதான GST விகிதம் 12 சாதவீதத்திலிருந்து 18% ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
சோளப்பொரி (பாப்கார்ன்) ஜிஎஸ்டியின் கீழ் உப்புத்தன்மை கொண்டதாக வகைப் படுத்தப் பட்டுள்ளதால் அதன் மீதான வரி 5% ஆகும்.
ஆனால், முன்கூட்டியே அடைக்கப்பட்டு விற்கப்படும் போது அதற்கான, வரி 12% ஆக அதிகரிக்கிறது.
இனிப்பூட்டப்பட்ட சோளப்பொரியானது சர்க்கரைசார் மிட்டாய் வகைக்குள் அடங்கும் என்பதோடு இது பொதுவாக 18% ஜிஎஸ்டி விகிதத்தை ஈர்க்கிறது.