TNPSC Thervupettagam

56வது இந்தோ-திபெத்திய எல்லைக் காவற்படையின் நிறுவிய தினம்

October 25 , 2017 2636 days 865 0
  • மத்திய உள்துறை அமைச்சர் , பெரும் நொய்டாவின் சூரஜ்பூரில் ITBP யின் 39 ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள லக்னவாலி முகாமில் நடைபெற்ற ITBP யின் 56 வது துவக்க நினைவு விழாவில் கலந்துகொண்டார்.
  • லடாக்கின் காரகோரம் கணவாயிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தில் ஜாசெப் லா வரையிலான 3488 கி.மீ நீளமுடைய இந்தோ-சீன சர்வதேச எல்லையை பாதுகாப்பதற்காக 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி இந்தோ-திபெத்திய எல்லைக்காவல் படை (Indo-Tibetan Border Police - ITBP) தோற்றுவிக்கப்பட்டது.
  • 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தோ-சீன போரின் விளைவாக மத்திய ரிசர்வ் போலீஸ் சட்டத்தின் கீழ் 1962ல் அக்டோபர் 24ஆம் தேதி ஐந்து ஆயுதக் காவல் படைகளில் ஒன்றாக ITBP தோற்றுவிக்கப்பட்டது.
  • 1992ல் இந்தோ-திபெத்தியன் எல்லைக் காவல் படைச்சட்டம் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டு முழு தன்னாட்சி அதிகாரம் ITBPக்கு வழங்கப்பட்டது.
  • இந்த காவல்படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்