TNPSC Thervupettagam

57-வது சர்வதேச மல்யுத்தப் போட்டி

March 6 , 2019 2094 days 641 0
  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 முதல் மார்ச் 03 வரை பல்கேரியாவின் ரூசேவில் 57-வது சர்வதேச மல்யுத்தப் போட்டியான “டான் கோலோவ் நிக்கோலா பெட்ரோவ்” நடத்தப்பட்டது.
  • இந்த சர்வதேச போட்டியானது டான் கோலோவ் மற்றும் நிக்கோலா பெட்ரோவா ஆகியோரின் நினைவாக பல்கேரிய மல்யுத்த கூட்டமைப்பினால் நடத்தப்பட்டது.
  • இந்திய மல்யுத்த வீரரான பாஜ்ராங் புனியா 65-கிலோ எடைப் பரிவில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜோர்டான் ஒலிவர் என்பவரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் இந்தத் தங்கப் பதக்கத்தை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்கு அர்ப்பணித்தார்.
  • இதர இந்திய வெற்றியாளர்கள் பின்வருமாறு:
    • பூஜா தண்டா – தங்கம் (59 கிலோ)
    • சாக்சி மாலிக் – வெள்ளி (65 கிலோ)
    • சந்தீப் தோமர் – வெள்ளி (ஆண்களின் 61 கிலோ பிரிவு)
    • வினேஷ் போகாட் – வெள்ளி (பெண்களின் 53 கிலோ)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்