மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் மாநில நிறுவன தினம் ஆண்டுதோறும் மே 1 அன்று கொண்டாடப்படுகின்றது.
1960-ஆம் ஆண்டு, மே 1 அன்று பம்பாய் மாநிலத்தை பிரித்ததில் மகாராஷ்டிரா மாநிலம் தனி மாநில தகுதியை (statehood) பெற்றது. மேலும் இப்பிரிவின் மூலம் குஜராத் எனும் தனி மாநிலமும் உருவானது.
இத்தினமானது மகாராஷ்டிரா திவாஸ் (Maharashtra Diwas) எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தினத்தன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காட்சிப்படுத்த பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.