TNPSC Thervupettagam
May 31 , 2023 417 days 1093 0
  • புகழ்பெற்ற கொங்கணி மொழிப் புதின எழுத்தாளரும், ஒரு சிறுகதை எழுத்தாளருமான தாமோதர் மௌசோ 57வது ஞானபீட விருதினை வென்றுள்ளார்.
  • ஞானபீட விருதானது ஆண்டுதோறும் வழங்கப்படும் பழமையான மற்றும் மிக உயரிய இந்திய இலக்கிய விருது ஆகும்.
  • புது தில்லியினை மையமாகக் கொண்ட ஒரு இலக்கிய மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான பாரதீய ஞானபீடம் என்ற அமைப்பால் இது வழங்கப் படுகின்றது.
  • மௌசோ 1983 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றுள்ளார்.
  • 2006 ஆம் ஆண்டில் ரவீந்திர கெலேகர் என்பவர் இந்த இலக்கிய விருதை வென்ற முதல் கொங்கணி எழுத்தாளர் என்ற பெருமையினைப் பெற்றார்.
  • அசாமிய மொழி கவிஞர் நில்மணி பூகன் 56வது ஞானபீட விருதை வென்றார்.
  • ஞானபீட விருதைப் பெற்ற மூன்றாவது அசாமிய எழுத்தாளர் பூகன் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்