TNPSC Thervupettagam

59வது ITBPயின் உருவாக்க தினம் – அக்டோபர் 24

October 31 , 2020 1400 days 407 0
  • இந்தோ – திபெத்திய எல்லைக் காவல் துறை (Indo-Tibetan Border Police - ITBP) என்பது திபெத்துடன் இந்தியா பகிர்ந்துள்ள எல்லையைப் பாதுகாக்கும் இந்தியாவின் முதன்மையான எல்லை ரோந்து அமைப்பாகும்.
  • ITBP ஆனது 1962 ஆம் ஆண்டில் சீனாவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் ஏற்படுத்தப் பட்டது.
  • இது சிஆர்பிஎப் சட்டத்தின் கீழ், 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று ஏற்படுத்தப் பட்டது.
  • இது இந்தியாவின் மத்திய ஆயுதக் காவல் படைகளில் அல்லது துணை இராணுவப் படைகளில் ஒன்றாகக் கருதப் படுகின்றது.
  • இந்தியாவில் சிஏபிஎப் (CAPF) என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 5 பாதுகாப்புப் படைகளின் ஒரு பொதுவான பெயராகக்  குறிக்கப் படுகின்றது.  
  • இவற்றின் முக்கியப் பணி உள்நாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக தேச நலனைப் பாதுகாப்பதாகும்.
  • இதர மற்ற படைகள் பின்வருமாறு : சாஸ்திரா சீமா பால், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை, அசாம் ரைபில்ஸ் மற்றும் தேசியப் பாதுகாப்புப் படை ஆகியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்