5ஜி சேவை பெற்ற இந்தியாவின் முதல் ஆளில்லா விமானம்
January 16 , 2023
682 days
374
- ஸ்கைஹாக் எனப்படும் 5ஜி சேவை பெற்ற இந்தியாவின் முதல் ஆளில்லா விமானத்தினை, நொய்டாவைச் சேர்ந்த ஐஜி ட்ரோன் எனும் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
- இது செங்குத்தான கோணத்தில் மேலெழும்பும் திறன் மற்றும் தரையிறங்கும் திறன் கொண்டது.
- ஸ்கைஹாக் 10 கிலோகிராம் பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
- இது பாதுகாப்பு, மருத்துவப் பயன்பாடுகள் மற்றும் பிற துறைகளில் பயன்படுத்தப் படக் கூடியது.
- இது சுமார் ஐந்து மணிநேரம் இயங்கும் திறன் கொண்டதோடு, இணைய இணைப்பு கிடைக்காத பட்சத்தில் செயற்கைக் கோள்கள் மூலம் செயல்படும் ஒரு திறனையும் கொண்டது.
Post Views:
374