புத்த மதத்தினருக்கான கலந்துரையாடல் மற்றும் கலாச்சார பீடங்களின் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் முன்மொழிதல்களோடு கிழக்கு சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் புத்தியான் நகரத்தில் 5வது உலக பௌத்த மன்றம் நிறைவு பெற்றது.
55 நாடுகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட புத்த மதத்தினர்கள், அறிஞர்கள் மற்றும் பிரதிநிதிகள் இம்மன்றத்தில் பங்கு பெற்றனர்.
இது சீனாவின் புத்தமத சங்கத்தாலும் சீனாவின் சமயக் கலாச்சார தொடர்பு சங்கத்தாலும் இணைந்து நடத்தப்பட்டது.
உலக புத்த மன்றம் 2005 ஆம் ஆண்டு சீன நிலப்பகுதி, தைவான், ஹாங்காங் மற்றும் மக்கவோ ஆகிய இடங்களில் உள்ள புத்த வட்டாரங்களால் ஆரம்பிக்கப்பட்டது.