மத்திய மின்சார ஆணையம் (CEA) ஆனது, டாடா பவர்-DDL நிறுவனத்துடன் இணைந்து 5வது மின் தொழிலாளிகள் தினத்தினைக் கொண்டாடியது.
இந்தத் தினமானது, இந்தியாவின் மின்சாரத் துறையில், மின் தொழிலாளிகள் மற்றும் நிலக் கட்டுப்பாட்டுப் பராமரிப்பு ஊழியர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது.
மத்திய மின்சார ஆணையம் (CEA) ஆனது, இந்தியாவில் மின்சாரத் துறை திட்டமிடல், மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைகளை மேற்கொள்வதற்கான பெரும் பொறுப்பினைக் கொண்டுள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
இது மின்சாரக் கொள்கை மற்றும் பல்வேறு தொழில்நுட்பத் தரநிலைகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குகிறது.