6-வது அமெரிக்கா – இந்தியா வான்போக்குவரத்து மாநாடு (6th United States-India Aviation Summit) அண்மையில் 2018 ஆம் ஆண்டின் மே மாதம் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் நடைபெற்றது.
மத்திய சிவில் வான் போக்குவரத்துத்துறை அமைச்சர் (Union Minister for Civil Aviation) சுரேஷ் பிரபுவினால் இந்த மாநாடு முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த மாநாடானது குடிமை வான் போக்குவரத்துத் துறையில் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் ஓர் தொழிற்நுட்ப கொள்கை மற்றும் வர்த்தக மன்றம் ஆகும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை (biennial Summit) நடத்தப்படும் இந்த மாநாடானது மத்திய சிவில் வான்போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Civil Aviation) மற்றும் அமெரிக்காவின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினால் (US Trade and Development Agency-USTDA) கூட்டிணைந்து நடத்தப்படுகின்றது.