TNPSC Thervupettagam

6வது NeSDA – முற்போக்கு மாதாந்திர அறிக்கை

October 19 , 2023 276 days 168 0
  • தேசிய மின்னாளுகை சேவை வழங்கீட்டு மதிப்பீடு (NeSDA) - மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கான முற்போக்கு மாதாந்திர அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • இது மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் முழுவதுமான மின்னாளுகை சேவை வழங்கலின் நிலை பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
  • மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் 14,736 மின்னாளுகை சேவைகள் வழங்கப் படுகின்றன.
  • ஜூலை மாத அறிக்கையிலிருந்து இதில் 6.2% (869) சேவை வழங்கீடுகள் அதிகரித்து உள்ளன.
  • ஜம்மு மற்றும் காஷ்மீர், கேரளா மற்றும் ஒடிசா ஆகியவை முழு அளவிலான சேவைகளை, அவற்றின் அடையாளம் காணப்பட்ட ஒருங்கிணைந்த ஒற்றைச் சேவை வழங்கீட்டுத் தளங்கள் மூலம் வழங்குகின்றன.
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் 1,368 மின்னாளுகை சேவைகள் பதிவாகியுள்ளன.
  • ஹரியானா இந்தத் துறையில் அதிகபட்ச மின்னாளுகை சேவைகளை வழங்குகிறது (149).
  • அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (96) மற்றும் ஜார்க்கண்ட் (89) ஆகியவை உள்ளன.
  • குழந்தைத் தொழிலாளர் மீட்பு சார்ந்த வழக்கு மேலாண்மையை எளிதாக்கும் வகையிலான வலைதளம் அடிப்படையிலான குழந்தைத் தொழிலாளர் கண்காணிப்பு அமைப்பினை (CLTS) பீகார் அரசு தொடங்கியுள்ளது.
  • குஜராத் அரசானது, வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை வழங்குநர்களை வெளிப்படையான மற்றும் பயனர்களுக்கு ஏற்ற முறையில் ஒரு தானியக்க பொருத்த அமைப்பு மூலம் இணைக்க வழிவகுக்கும் ‘அனுபந்தம்’ என்ற அமைப்பினை உருவாக்கி உள்ளது.
  • உத்தரகாண்ட் அரசானது, அம்மாநிலத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளையோர்களுக்கு ரோஜ்கர் பிரயாக் இணைய தளம் மூலம் வேலை வாய்ப்புத் தகவல்களை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்