தமிழ்நாட்டில் மட்டும் தயாரிக்கப்படும் மிக தனித்துவமான ஆறு தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு (GI) வழங்கப்பட்டுள்ளது.
இதில் பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா மிளகாய் வத்தல் (வரமிளகாய்), செட்டிகுளம் சின்ன வெங்காயம் மற்றும் இராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி ஆகியவை அடங்கும்.
இந்தப் புதிய சேர்க்கைகளின் பிறகு, மாநிலத்தில் புவிசார் குறியீடு பெற்ற மொத்தத் தயாரிப்புகளின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு (79) அடுத்தபடியாக, அதிகப் புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகளைக் கொண்ட மாநிலமாக இரண்டாவது இடத்தில் உள்ளது.