- நியூ வேர்ல்டு வேல்த் எனும் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள உலக பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
- உலகின் பணக்கார நாடாக அமெரிக்கா முதலிடம் பெற்று விளங்குகின்றது.
- 2-வது மற்றும் 3-வது இடத்தில் முறையே சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
உயர் நிகர சொத்து மதிப்புடைய தனிநபர்கள்
- மேலும் இந்த அறிக்கையில் இந்தியாவில் 3,30,400 உயர் நிகர சொத்து மதிப்புடைய தனிநபர்கள் (HNWI – High Net Worth Individuals) உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த அம்சத்தில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
- தங்களுடைய நிகர சொத்து மதிப்பில், 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (United States Dollar) அல்லது அதற்கும் அதிகமாக பண மதிப்பைக் கொண்ட தனிநபர்கள், உயர் நிகர சொத்து மதிப்புடைய தனிநபர்கள் என்றழைக்கப்படுவர்.