சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையானது மாணவர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் மற்றும் மாநிலத்தில் பயன்பாட்டில் உள்ள தேர்வு முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது மாநிலத்தில் நிலவுகின்ற நடப்புக் கல்வியியல் சூழ்நிலைகளை (Educational Scenario) கண்டறிந்து அவற்றை பகுத்தாய்வதற்காக 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் உயர்நிலைக் கல்வி இயக்குநர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர், மனோநிலை மருத்துவரான ராமசுப்ரமணியன், மன நல ஆரோக்கியம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான தேசிய நிறுவனத்தின் பதிவாளர் K.சேகர் ஆகியோர் கொண்டு இந்த 6 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.