2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுகம் மூலமாக 6 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுக இயங்குதளம் தொடங்கப் பட்டதிலிருந்துப் பதிவான மிக அதிகப் பரிவர்த்தனை இதுவாகும்.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுகம் மூலம் ரூ.10.62 டிரில்லியன் மதிப்பிலான 6.28 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற் கொள்ளப் பட்டுள்ளது.
தற்போது பரிவர்த்தனைகளின் அளவானது 7.16 சதவீதம் அதிகரித்துள்ளது.
தற்போது பரிவர்த்தனைகளின் மதிப்பானது, மாதந்தோறும் 4.76 சதவீதம் அதிகரித்து உள்ளது.