கஸ்தூரி பருத்தி என்ற உலகளாவியத் தயாரிப்பினை மேம்படுத்துவதற்காக உயர் தர பருத்திகளைப் பரிசோதிப்பதற்காக பிரத்தியேக ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் இந்த ஆய்வகங்கள் நிறுவப்பட உள்ளன.
மகத்தான மென்மை, வலிமை மற்றும் நீடித்த உழைப்பிற்காகப் பிரபலமாக அறியப் படுகின்ற சுபிமா மற்றும் கிசா போன்ற உலகளாவியப் பருத்தித் தயாரிப்புகளுடன் இந்தியா போட்டியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சோதனை மையங்கள் இந்தியப் பருத்திக் கழகத்தினால் (CCI) செயல்படுத்தப் படுகிறது.