TNPSC Thervupettagam

6 யுன்ஹாய் - 2 செயற்கைக் கோள்கள் மற்றும் ஒரு சோதனை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்

December 30 , 2018 2062 days 619 0
  • சீனா தனது யுன்ஹாய் - 2 என்ற 6 வளிமண்டல சூழல் ஆராய்ச்சி செயற்கைக் கோள்களையும் ஹாங்யான் விண்மீன் கூட்டத்திற்கான ஒரு சோதனை தகவல்தொடர்பு செயற்கைக் கோளையும் விண்வெளி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
  • இந்த 6 யுன்ஹாய் - 2 செயற்கைக் கோள்களானது வளிமண்டல சூழல், விண்வெளி சூழல் கண்காணிப்பு, பேரிடர்களைத் தடுத்தல் மற்றும் குறைத்தல் மற்றும் அறிவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளுதல் ஆகியவைகள் குறித்து ஆய்வு செய்யும்.
  • சோதனை செயற்கைக் கோளானது குறைமட்டப் புவிப் பாதையில் உள்ள கைபேசிகளின் தகவல் தொடர்புகளுக்கான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக பயன்படுத்தப்படவிருக்கிறது (LEO - Low Earth Orbit).
  • சோதனை செயற்கைக் கோளானது சீன விண்வெளித் தொழில்நுட்ப அகாடமியின் கீழ் இயங்கும். சென்செனில் உள்ள டோங்பேங்க்ஹோங் விண்வெளி வளர்ச்சி நிறுவனத்தால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்