6-வது சர்வதேச சுற்றுலா திருவிழாவானது அஸ்ஸாமின் கவுகாத்தியில் தொடங்கப்பட்டது.
மத்திய சுற்றுலா மேம்பாட்டு அமைச்சகத்தோடு இணைந்து வடகிழக்கு மாநிலங்கள் இந்த திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் சுழற்சி முறையின் அடிப்படையில் சர்வதேச சுற்றுலா திருவிழாவானது நடத்தப்படுகின்றது.
பிராந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளின் செறிந்த மற்றும் பல்வகையான சுற்றுலா பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த திருவிழா நடத்தப்படுகின்றது.
இந்தியாவின் வளரும் சுற்றுலா சந்தை மற்றும் உலகில் விரைவான பொருளாதார வளர்ச்சியுடைய பகுதியான கிழக்கு ஆசியப் பிராந்தியம் மற்றும் ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் மலரும் உறவுகள், இந்தியாவின் “கிழக்கு நோக்கிய செயல்திட்ட” கோட்பாட்டு ஆகியவற்றின் மேல் சிறப்பு கவனத்தை உண்டாக்குவதே இதன் நோக்கமாகும்.