TNPSC Thervupettagam

60 மெகாவாட் துதியால் நீர் மின்சக்தி

December 18 , 2017 2565 days 853 0
  • பிரதம மந்திரி மிசோரமில் உள்ள 60 மெகாவாட் சக்தி கொண்ட துதியால் நீர் மின்சக்தித் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • இது மிசோரமில் உள்ள மிகப்பெரியத் திட்டமாகும்.
  • இங்கு உற்பத்தியாகவுள்ள மின்சக்தி மிசோரம் மாநிலத்தின் ஒட்டு மொத்த மின் தேவைக்கு செலவிடப்படும்.
  • இதன் மூலம் இந்திய அரசின் “24 X 7 அனைவருக்கும் மலிவு விலையாலான தூய்மையான சக்தி” என்ற திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற மாநில அரசால் முடியும்.
  • துதியால் திட்டம் மத்திய துறை திட்டமாக கட்டப்பட்டிருக்கிறது.
  • மேலும், இத்திட்டம் மத்திய மின்துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வடகிழக்கு மின்சக்தி கழகத்தால் நிறைவேற்றப்படும்.
  • மிசோரமின் தற்போதைய மின்சக்தி தேவை 87 மெகாவாட் இத்திட்டத்தின் மூலம் கூடுதலாக கிடைப்பது 60 மெகாவாட்.
  • இதன் மூலம், சிக்கிம் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு அடுத்து வடகிழக்கு இந்தியாவில் மூன்றாவது மின்மிகை மாநிலமாக மிசோரம் உருவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்