புகழ்பெற்ற பனாரஸ் தண்டை உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து 60க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான புவிசார் குறியீடுகள் வழங்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
அசாமில் இருந்து ஆஷாரிகண்டி சுடுமண் கைவினைப்பொருள், பானி மெட்டேகா கைவினைப் பொருள், சர்தேபரி உலோக கைவினை, ஜாபி (அசாமின் கிராமப்புறப் பகுதிகளில் செய்யப்படும் மூங்கில் தலைக்கவசம்), மிஷிங் கைத்தறிப் பொருட்கள் மற்றும் பிஹு தோல் ஆகிய ஆறு பாரம்பரியக் கைவினைப் பொருட்கள் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளன.
போடோ பெண்களின் பாரம்பரிய உடையான போடோ டோகோனா மற்றும் போடோ எரி பட்டு உட்பட அசாமின் மற்ற 13 தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடுகள் வழங்கப் பட்டுள்ளன.
திரிபுரா பகுதியில் பச்ரா-ரிக்னாய் மற்றும் மாதாபரி பேடா என்ற இனிப்புத் தயாரிப்பு ஆகிய இரண்டு தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
சமூக-கலாச்சார மற்றும் மதச் சடங்குகளுடன் தொடர்புடைய மேகாலயா கரோ ஜவுளிகள்' நெசவு முறை மற்றும் 'மேகாலயா லைர்னை மட்பாண்டங்கள்' மற்றும் 'மேகாலயா சுபிட்சி' ஆகியவையும் புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளன.
69 தயாரிப்புக்கள் புவிசார் குறியீடு பெற்றதுடன், உத்தரப் பிரதேசம் ஆனது தற்போது புவிசார் குறியீடு பெற்ற 58 தயாரிப்புகளைக் கொண்ட தமிழ்நாட்டை விஞ்சியுள்ளது.
இன்று வரையில் இந்தியாவில் சுமார் 635 தயாரிப்புகளுக்கு வேண்டிப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
நாட்டின் முதல் புவிசார் குறியீடு ஆனது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் புகழ்பெற்ற டார்ஜிலிங் தேயிலைக்கு வழங்கப்பட்டது.