இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் விண்வெளி தொலைநோக்கியானது, 600க்கும் மேற்பட்ட காமா-கதிர் வெடிப்பினை (GRB) கண்டறிந்ததன் மூலம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
ஒவ்வொரு GRB நிகழ்வும் ஒரு மாபெரும் நட்சத்திரத்தின் அழிவினைக் குறிக்கும் அல்லது நியூட்ரான் நட்சத்திரங்களின் இணைவைக் குறிக்கிறது.
GRB நிகழ்வுகள் ஆனது சூரியன் தனது வாழ்நாள் முழுவதும் வெளியிடும் ஆற்றலை விட நொடிகளில் அதிக ஆற்றலை வெளியிடுகின்ற பேரண்டத்தில் நிகழும் மிகவும் ஆற்றல் வாய்ந்த வெடிப்புகள் ஆகும்.
GRB நிகழ்வுகள் ஒரு வினாடியின் ஒரு பகுதி முதல் பல நிமிடங்கள் வரை நீடிக்கும் என்பதோடு இதனுடன் சேர்ந்து கருந்துளையின் உருவாக்கமும் நிகழும்.