TNPSC Thervupettagam

6,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்கள்

July 25 , 2023 362 days 220 0
  • 6,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் 10 தொழில்துறைத் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இவை 27,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டவை ஆகும்.
  • இந்த 10 திட்டங்களில், இரண்டு மின்சார-வாகன உற்பத்தி ஆலைத் திட்டங்கள், மூன்று பொது உற்பத்தி ஆலைத் திட்டங்கள் மற்றும் ஒன்று மின்னணு வன்பொருள் உற்பத்தி ஆலைத் திட்டமாகும்.
  • இதில் ஒன்று தொழில்நுட்ப ரீதியிலான ஜவுளி உற்பத்தி ஆலை அமைப்பு திட்டமாகும்.
  • இதன்படி கோத்ரேஜ் நுகர்வோர் பொருட்கள் நிறுவனம் தமிழ்நாட்டில் ஒரு தொழிற் சாலையினைத் துவக்கி வைக்கிறது.
  • கடந்த ஆண்டு, அரசாங்கமானது 2022 ஆம் வாழ்வியல் அறிவியல் கொள்கை மற்றும் 2022 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை ஆகியவற்றை வெளியிட்டது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள், உயர்கல்வி மற்றும் தனியார் துறைகளில் அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மீதான செலவினங்களை இரட்டிப்பாக்கல்  என்பதே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
  • இது 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு மாநிலத்தினை அறிவு சார்ந்த ஒரு பொருளாதாரமாக மாற்றுவதோடு, உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் சிறந்து விளங்கச் செய்யும்.
  • 20,000 கோடி முதலீடுகளை ஈர்த்து 50,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு  வாழ்வியல் அறிவியல் கொள்கை கொண்டுவரப்பட்டது.
  • இது உயிரியல், ஒத்த உயிரிய அம்சம் கொண்ட மருந்துகள் மற்றும் மருத்துவ தொழில் நுட்பத்தில் ஆய்வினை மேற்கொள்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் மிக அதிகம் தேர்வு செய்யும் இடமாக தமிழக மாநிலத்தை மாற்றும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்