1,30,000 ஆண்டுகளில் 610 பறவை இனங்கள் அழிந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் ஆவணப் படுத்தியுள்ளனர்.
இது உலகம் முழுவதுமான ஹோமோ சேபியன்களின் பரவலுடன் ஒத்துப் போகிறது.
டோடோ எனப்படும் பறக்க முடியாத பறவையானது 1598 ஆம் ஆண்டில் நெதர்லாந்து (டச்சு) மாலுமிகளால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதோடு இது 1681 ஆம் ஆண்டில் அழிந்து போனது.
மொரிஷியஸ் தீவின் தனித்த சூழல் இந்தப் பறவைகளுக்கு பயன்பட்டது.
610 பறவை இனங்களில், சுமார் 90% ஆனது மனிதர்களின் நடவடிக்கை காரணமாக ஓரளவுக்கு அழிந்து விட்டன.
610 இனங்கள் ஒரு சேர சுமார் 3 பில்லியன் ஆண்டுகளின் தனித்துவமான பரிணாம வரலாற்றைக் குறிக்கின்றன.
சுமார் 11,000 பறவை இனங்கள் தற்போது உள்ளன, அவை சுற்றுச்சூழலின் வியத்தகுப் பிரிவுகளை ஆக்கிரமித்துள்ளன.
ஆராய்ச்சியாளர்கள் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழியும் என்று கணித்துள்ளனர்.