TNPSC Thervupettagam

610 பறவை இனங்களின் அழிவு

October 17 , 2024 37 days 107 0
  • 1,30,000 ஆண்டுகளில் 610 பறவை இனங்கள் அழிந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் ஆவணப் படுத்தியுள்ளனர்.
  • இது உலகம் முழுவதுமான ஹோமோ சேபியன்களின் பரவலுடன் ஒத்துப் போகிறது.
  • டோடோ எனப்படும் பறக்க முடியாத பறவையானது 1598 ஆம் ஆண்டில் நெதர்லாந்து (டச்சு) மாலுமிகளால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதோடு இது 1681 ஆம் ஆண்டில் அழிந்து போனது.
  • மொரிஷியஸ் தீவின் தனித்த சூழல் இந்தப் பறவைகளுக்கு பயன்பட்டது.
  • 610 பறவை இனங்களில், சுமார் 90% ஆனது மனிதர்களின் நடவடிக்கை காரணமாக ஓரளவுக்கு அழிந்து விட்டன.
  • 610 இனங்கள் ஒரு சேர சுமார் 3 பில்லியன் ஆண்டுகளின் தனித்துவமான பரிணாம வரலாற்றைக் குறிக்கின்றன.
  • சுமார் 11,000 பறவை இனங்கள் தற்போது உள்ளன, அவை சுற்றுச்சூழலின் வியத்தகுப் பிரிவுகளை ஆக்கிரமித்துள்ளன.
  • ஆராய்ச்சியாளர்கள் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழியும் என்று கணித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்