பிரபஞ்சத்தினை பற்றிய புதிர்களை அகற்ற உதவும் புதிய 64-டிஷ் மீர்காட் எனும் வானொலி (ரேடியோ) தொலைநோக்கியினை தென் ஆப்பிரிக்கா வெளியிட்டுள்ளது.
மீர்காட், சிக்கலான SKA (Square Kilometre Array) கருவியுடன் இணைக்கப்படும்.
SKA, பிற்காலத்தில் 2020-ல் முழுமையாக உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததாக செயல்பாட்டிலிருக்கும்.
SKA-னை நிறுவிக்காட்டும் திறனை உறுதிப்படுத்திக் காட்டுவதற்காக பரந்த மித பாலைவன பகுதியான கேப் டவுனின் வடக்குபகுதியில் உள்ள கரூ பகுதியில் கட்டப்பட்ட KAT 7-ன் (Karoo Array Telescope) பின்தொடரலாக தென் ஆப்பிரிக்காவின் மீர்காட் இருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் ஆய்வு செய்யப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட உண்மையில் கரூ அரே தொலைநோக்கி (Karoo Array Telescope) என்றறியப்படும் மீர்காட் 64 கண்ணாடிகளைக் கொண்ட வானொலி (ரேடியோ) தொலைநோக்கி ஆகும்.
இந்த தொலைநோக்கி, அண்டத்தின் காந்த விசை, அகிலத்தின் பெரும் அளவிலான அமைப்பு, கரும்பொருள் (Dark Matter) மற்றும் நிலையற்ற ரேடியோ ஆதாரங்கள் ஆகியவற்றினைப் பற்றிய ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படும்.