2018-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 7-ஆம் தேதி புது தில்லியில் லலித் கலா அகாடமியின் 64-வது நிறுவனர் தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிறுவனம் 1954-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 5-ஆம் தேதி, இந்திய அரசால் தேசிய மற்றும் கலாச்சார அடையாளத்தை உருவாக்க நிறுவப்பட்டது.
இக்கொண்டாட்டத்தில் புகழ்பெற்ற கலைஞர் கணேஷ் பைனே பற்றி பிரணவ் ரஞ்சன் ராய் எழுதிய “A Painter of Eloquent Silence” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
இப்புத்தகம், அந்த ஓவியக் கலைஞரின் வாழ்க்கை மற்றும் அவரது படைப்புகள் பற்றிய சுயசரிதைப் புத்தகமாகும். இது லலித் கலா அகாடமி மற்றும் அகர் பிரகார் கலைக்கூடம் ஆகியவற்றுடன் இணைந்து வெளியிடப்பட்டது.
2018-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் அகாடமியில் நடத்தப்பட உள்ள 12-வது மூன்றாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சி பற்றிய முத்திரையை அமைச்சர் வெளியிட்டார்.