TNPSC Thervupettagam

65வது தேசிய திரைப்பட விருதுகள்

April 17 , 2018 2287 days 928 0
  • 2017 ஆம் ஆண்டிற்கான 65-வது தேசிய திரைப்பட  விருதுகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் (Union Ministry of Information and Broadcasting) அண்மையில் அறிவித்துள்ளது.
  • மத்திய தனிச்சிறப்பு திரைப்படக் குழுவிற்கு (Feature Film Central panel) ஹிந்தி சினிமா மற்றும் சர்வதேச சினிமாவில் தன்னுடைய செயல்பாட்டிற்காக பெயர் பெற்ற, புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான சேகர் கபூர் தலைமை வகித்தார்.
  • தனிச்சிறப்பு இல்லா திரைப்படக் குழுவிற்கு (Non- Feature Film panel)   நகுல் கம்தே தலைமை தாங்கினார்.
  • தேசிய திரைப்பட விருதுகளானது இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய திரைப்பட  விருதுகளாகும்.
  • 1954 ஆம் ஆண்டு தேசிய திரைப்பட விருதுகள் நிறுவப்பட்டன.
  • ஆண்டு தோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • மத்திய அரசால் நியமிக்கப்படுகின்ற தேசிய நடுவர்கள் குழுவினால் தேசிய விருதுகளினுடைய பல்வேறு வகைப்பாட்டிற்கு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

தேசிய விருதுகள் விருது பெற்றோர்
தாதா சாகேப் பால்கே விருது வினோத் கன்னா
சிறந்த திரைப்படம் வில்லேஜ் ராக் ஸ்டார் (அஸ்ஸாமிய மொழிப்படம்)
சிறந்த நடிகை ஸ்ரீ தேவி  (மாம் )
சிறந்த நடிகர் ரித்தி சென் (நகர் கிர்தான்)
சிறந்த இயக்குனர் ஜெயராஜ்  - பயானகம்  (மலையாளம்)
சிறந்த சண்டை அமைப்பு பாகுபலி 2
சிறந்த நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா ( டூ லெட்,  ஏக் பிரேம் கதா)
சிறப்புக் காட்சியமைப்பு பாகுபலி 2
சிறப்பு நடுவர் விருது நகர் கிர்தான்  (பெங்காலி)
சிறந்த பாடலாசிரியர் ஜெ.எம். பிரஹலாத் (முத்துரத்னா பாடல்)
சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் (காற்று வெளியிடை)
சிறந்த ஒப்பனைக் கலைஞர் ராம் ரஜக் (நகர் கிர்தான்)
சிறந்த ஆடை வடிவமைப்பு கோபிந்தா மந்தல் (நகர் கிர்தான்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு சந்தோஷ் ராஜன் (டேக் ஆஃப்)
சிறந்த படத் தொகுப்பு ரீமா தாஸ் (வில்லேஜ் ராக்ஸ்டார்)
சிறந்த ஒலி வடிவமைப்பு வாக்கிங் வித் தி விண்ட்
சிறந்த ஒலித் தொகுப்பு மல்லிகா தாஸ் (வில்லேஜ் ராக்ஸ்டார்)
சிறந்த ஒலிப்பதிவு – படப்பிடிப்பில் செய்யப் பட்டது       (Location Sound Recording) மல்லிகா தாஸ் (வில்லேஜ் ராக்ஸ்டார்)
சிறந்த அசல் திரைக்கதை தொண்டிமுதலும் த்ரிக்சாக்சியும்
சிறந்த தழுவல் திரைக்கதை பயானகம்
சிறந்த ஒளிப்பதிவு நிகில் எஸ்.பிரவீன் (பயானகம்)
சிறந்த பின்னணிப் பாடகி ஷாஷா திருப்பதி (காற்று வெளியிடை)
சிறந்த பின்னணிப் பாடகர் யேசுதாஸ் (போய் மரைஞ்ஞ காலம் -விஸ்வாசபூர்வம்   மன்சூர்)
சிறந்த குழந்தை நட்சத்திரம் அனிதா தாஸ் (வில்லேஜ் ராக்ஸ்டார்)
சிறந்த குழந்தைகள் படம் மோர்கியா
சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம் இராடா
சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான படம் தப்பா (மராத்தி)

சிறப்பு குறியீடு  உடைய சிறந்த பிராந்திய படங்கள்

மராத்தி மோர்கியா (Mhorkya)
மலையாளம் டேக் ஆப் (Take Off)

சிறந்த பிராந்திய மொழிப் படங்கள்

தமிழ் டூ லேட்   (To let)
ஹிந்தி நியூட்டன்   (Newton)
லடாக் மொழி வாக்கிங் வித் தி வின்ட்    (Walking With The Wind)
லட்சத்தீவு சின்ஜார் (Sinjar)
துளு படாயி (paddayi)
மராத்தி கச்சா லிம்பு (Kachcha Limboo)
மலையாளம் தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் (Thondimuthalum Driksakshiyum)
கன்னடம் ஹெபெட்டு   ராமக்கா (Hebbettu Ramakka)
வங்காள மொழி மயூராக்சி (Mayurakshi)
அசாமி இஷு
தெலுங்கு காஸி  (Ghazi)
குஜராத்தி த் (Dhh)
ஒரியா ஹலோ அர்சி (Hello Arsi)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்