TNPSC Thervupettagam

66-வது தேசியத் திரைப்பட விருதுகள்

August 11 , 2019 2089 days 773 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான 66-வது தேசியத் திரைப்பட விருதுகளானது (NFA - National Film Awards) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பான திரைப்படத் திருவிழாக்கள் இயக்குநரகத்தால் (Directorate of Film Festivals - DFF) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதுகளுக்கான தேர்வானது DFFயினால் நியமிக்கப்பட்ட புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழுவினால் மேற்கொள்ளப் படுகின்றது.

  • 2019 ஆம் ஆண்டின வெற்றியாளர்கள் பின்வருமாறு:
    • சிறந்த  திரைப்படத்திற்கான விருது : குஜராத்தி மொழித் திரைப்படமான ஹெலாரோ
    • சமூகப் பிரச்சினைகளைப் பேசும் சிறந்த திரைப்படம் : இந்தி மொழித் திரைப்படமான பத்மன்
    • சிறந்த இயக்குநருக்கான விருது : உரி - ஒரு துல்லியத் தாக்குதல் என்ற திரைப்படத்தின் இயக்குநர் ஆதித்யா தார்.
    • சிறந்த நடிகருக்கான விருது : அந்தாதூன் மற்றும் உரி - துல்லியத் தாக்குதல் ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக ஆயுஷ்மான் குரானா மற்றும் விக்கி கௌசல் ஆகியோருக்குக் கூட்டாக வழங்கப்பட்டது.
    • சிறந்த நடிகைக்கான விருது : தெலுங்குத் திரைப்படமான மகாநதியில் சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷிற்கு வழங்கப்படுகின்றது.
    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த திரைப்படம் : மராத்தி மொழித் திரைப்படமான பானி
    • தேசிய ஒருங்கிணைப்பு குறித்த சிறந்த திரைப்படப்பத்திற்கான நர்கிஸ் தத் விருது : கன்னட மொழித் திரைப்படமான ஒண்டாலா எர்டாலா
    • திரைப்படத்திற்கு மிகவும் உகந்த சூழலைக் கொண்ட மாநிலம் : உத்தரகாண்ட்

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்