TNPSC Thervupettagam

68வது தேசியத் திரைப்பட விருதுகள் 2022

July 25 , 2022 729 days 396 0
  • கோவிட்-19 தொடர்பாக ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக இந்த ஆண்டின் விருது வழங்கும் விழாவானது, 2020 ஆம் ஆண்டிலிருந்து வெளியான திரைப்படங்களைக் கௌரவிக்கும் வகையில் விருதுகளை வழங்கியது.
  • சூரரைப் போற்று திரைப்படமானது இந்த விருது வழங்கும் விழாவில் நான்கு முக்கிய விருதுகளுள் மூன்று விருதுகளை வென்றது.
  • தன்ஹாஜி தி அன்சங் வாரியர்’ என்ற திரைப்படமும் முக்கிய விருதுகளை வென்றது.
  • தேசியத் திரைப்பட விருதுகள் ஆனது 1954 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடத்தப் பட்டு வரும் ஒரு மிக முக்கியமான திரைப்பட விருது விழாவாகும்.
  • சில முக்கிய விருதுகள்
    • சிறந்த திரைப்படம்: சூரரைப் போற்று
    • சிறந்த இயக்குனர்: அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்திற்காக சச்சிதானந்தன் K.R
    • சிறந்த நடிகர்: சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சூர்யா மற்றும் தன்ஹாஜி திரைப்படத்திற்காக அஜய் தேவ்கான்
    • சிறந்த நடிகை: சூரரைப் போற்று திரைப்படத்திற்காக அபர்ணா பாலமுரளி
    • சிறந்த பின்னணி இசை: சூரரைப் போற்று திரைப்படத்திற்காக G.V. பிரகாஷ் குமார்
    • சிறந்த துணை நடிகை: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப் படத்திற்காக லட்சுமி பிரியா சந்திரமௌலி
    • சிறந்த தொகுப்பு: சிவரஞ்சினியும் இன்றும் சில பெண்களும் திரைப்படத்திற்காக ஸ்ரீகர் பிரசாத்
    • சிறந்த திரைக்கதை: சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சுதா கொங்கரா மற்றும் மண்டேலா திரைப்படத்திற்காக மடோன் அஷ்வின்
    • தமிழில் சிறந்த திரைப்படம்: சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்.
    • சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது: மண்டேலா (தமிழ்) திரைப் படத்திற்காக மடோன் அஷ்வின்
    • திரைப்படம் எடுப்பதற்கு மிகவும் உகந்த மாநிலம்: மத்தியப் பிரதேசம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்