TNPSC Thervupettagam

69வது ஸ்டிரேன்ட்ஜா நினைவு குத்துச் சண்டை போட்டி

March 2 , 2018 2490 days 859 0
  • பல்கேரியாவின் சோபியா நகரில் நடைபெற்ற ஸ்டிரேன்ட்ஜா நினைவு குத்துச் சண்டைப் போட்டியின் 75 கிலோ எடைப்பிரிவில் விகாஸ் கிருஷ்ணன், இதற்கு முன்னர் வெண்கலப் பதக்கம் வென்ற உலக சாம்பியன் டிராய் ஐஸ்லேவை வென்று சாதனை படைத்துள்ளார்.
  • கடந்த ஆண்டு (ஏப்ரல் – மே 2017ல்) நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியிலிருந்து விகாஸ் கிருஷ்ணன் பெற்ற முதல் பதக்கம் இதுவேயாகும்.
  • சிறந்த குத்துச்சண்டை வீரருக்கானப் பட்டத்தையும் விகாஸ் கிருஷ்ணன் வென்றுள்ளார்.
  • அமித் பங்கால் (49 கிலோ) தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
  • இந்தியா மொத்தம் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்களைச் சேர்த்து 11 பதங்கங்களை (5 ஆண்கள், 6 பெண்கள்) வென்றுள்ளது.
  • மேலும் இப்போட்டியில் இந்தியாவின் மேரி கோம், சீமா பூனியா ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்