இண்டிகோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு விமான முன்பதிவு செய்ய உதவுவதற்காக ‘6Eskai’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு உரையாடு மென்பொருள் ஒன்றினை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயற்கை நுண்ணறிவு உரையாடு மென்பொருள் ஆனது, வியக்கத்தக்க 1.7 டிரில்லியன் அளவுருக்களைக் கொண்டுள்ளதோடு, இது மேலும் பலதரப்பட்ட பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்க வழி வகை செய்கிறது.
இது வாடிக்கையாளர் சேவை முகவரின் 75% பணிச்சுமையைக் குறைப்பதன் மூலம், அதன் செயல்திறன் மற்றும் பயன்திறனை வெளிப்படுத்துகிறது.
முன்பதிவுப் பயணம் முழுவதும், வாடிக்கையாளருக்கு வழிகாட்டுவதற்காக இயல்பான மொழி உரையாடல்களையே இந்த மென்பொருள் பயன்படுத்துகிறது.