6வது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான உத்தி சார்ந்த பொருளாதார உரையாடல்
September 7 , 2019 1909 days 560 0
6வது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான உத்தி சார்ந்த பொருளாதார உரையாடலானது புது தில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்தியாவின் சார்பில் நிதி ஆயோக்கின் துணைத் தலைவரின் தலைமையிலான குழுவினரும் சீனாவின் சார்பில் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவரின் தலைமையிலான குழுவினரும் கலந்து கொள்கின்றனர்.
2018-19 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகமானது 87 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
வர்த்தகப் பற்றாக்குறை சீனாவுக்குச் சாதகமாக 50 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.