TNPSC Thervupettagam

6வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள்

December 28 , 2023 204 days 903 0
  • 6வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் ஆனது, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 19 முதல் 31 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.
  • மத்திய இளையோர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து சென்னையில் நடைபெற உள்ள 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கான உருவச் சின்னத்தை வெளியிட்டனர்.
  • 6வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ முத்திரைச் சின்னம், சின்னம் பதித்த ஆடை, சுடர் மற்றும் கருப்பொருள் கொண்ட பாடல் ஆகியவையும் இந்த விழாவில் வெளியிடப்பட்டன.
  • இந்த விளையாட்டுப் போட்டிகளின் உருவச் சின்னம் வீரமங்கை வேலு நாச்சியார் ஆகும்.
  • இந்த விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக ஸ்குவாஷ் போட்டி சேர்க்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்