TNPSC Thervupettagam

6வது சர்வதேசக் கோப்பை (பளு தூக்குதல்) – 2019

December 28 , 2019 1668 days 684 0
  • கத்தார் பளு தூக்குதல் சர்வதேசக் கோப்பை - 2019ன் 6வது பதிப்பானது கத்தாரின் தோஹாவில் நடத்தப்பட்டது.
  • இந்த நிகழ்வானது சர்வதேசப் பளு தூக்குதல் கூட்டமைப்பின் (International Weightlifting Federation - IWF) கீழ் உள்ள கத்தார் பளு தூக்குதல் கூட்டமைப்பினால் (Qatar Weightlifting Federation - QWF) நடத்தப் பட்டது.
  • ஜெர்மி லால்ரின்னுங்கா என்பவர் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் அனைத்துப் பிரிவிலும் அவரது பெயரில் இருந்த 27 சாதனைகளை  முறியடித்தார்.
  • இவர் 12 சர்வதேச சாதனைகள் (மூன்று இளையோர் உலகப் போட்டி, மூன்று இளையோர் ஆசிய, ஆறு காமன்வெல்த் சாதனைகள் உட்பட) மற்றும் 5 தேசிய இளையோர் சாதனைகளுடன் 5 இளையோர் தேசிய மற்றும் 5 மூத்த தேசிய சாதனைகளையும் முறியடித்துள்ளார்.
  • இந்திய வெற்றியாளர்கள் பின்வருமாறு:

வெற்றியாளர்

பிரிவு

பதக்கம்

சாய்கோம்: மீராபாய் சானு

பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு

தங்கம்

ஜெர்மி லால்ரின்னுங்கா

ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவு

வெள்ளி

ராக்கி ஹால்டர்

பெண்களுக்கான 64கிலோ எடைப்பிரிவு

வெண்கலம்

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்