பார்சிலோனா அணியைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி 6வது முறையாக உலகின் சிறந்த வீரருக்கான பாலன் டி’ஓர் விருதினை வென்றுள்ளார்.
2015 ஆம் ஆண்டு விருது மெஸ்ஸியின் முதலாவது பாலன் டி'ஓர் விருதாகும். ஒட்டுமொத்தமாக அவரது ஆறாவது விருது இதுவாகும்.
பாலன் டி'ஓர் ஃபெமினின் (மகளிர் பலன் டி'ஓர்) என்ற விருதானது “மேகன் ராபினோ” என்பவருக்கு வழங்கப்பட்டது.
பெண்களுக்கான இந்தச் சிறப்பு விருதானது 2018 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டு, வழங்கப் பட்டு வருகின்றது.
தொடக்க பதிப்பிற்கான விருதை நார்வே நாட்டைச் சேர்ந்த அடா ஹெர்பெர்க் வென்றுள்ளார்.
இந்த இரண்டு விருதுகளும் பிரான்ஸ் கால்பந்து என்ற பத்திரிகையால் ஏற்படுத்தப் பட்டன. இந்த விருதுகளுக்கு உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்கள் அடங்கிய குழுவால் வாக்களிக்கப் பட்டன.