ஓய்வு பெறும் அரசு அதிகாரிகளின் அயராத மிகப் பெரும் பங்களிப்பை முன்னிலைப் படுத்துவதற்கும் அதனை அங்கீகரிப்பதற்குமான ஒரு தளமாக 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘அனுபவ்’ இணைய தளம் தொடங்கப்பட்டது.
இந்த புதுமையான திட்டம் ஆனது, ஓய்வுபெறும் அரசு ஊழியர்களை அவர்களின் பணி ஆண்டுகளில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் மற்றும் நுண்ணறிவுகளை ஆவணப் படுத்த ஊக்குவிக்கிறது.
7வது விருது வழங்கும் விழாவில், இதுவரையில் இல்லாத அளவுக்கு பெண்களின் பிரதிநிதித்துவம் 33% ஆக உள்ளது என்பது நிர்வாகத்தில் பெண்களின் வளர்ந்து வரும் பங்கைப் பிரதிபலிக்கிறது.
5 அனுபவ் விருதுகள் மற்றும் 10 தேர்வாளர்கள் சான்றிதழ்களை உள்ளடக்கிய இந்த விருதுகளானது பல்வேறு பிரிவுகளில் சிறந்தப் பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு வழங்கப்பட்டன.