இந்த ஒரு மாத காலப் பிரச்சாரம் ஆனது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்துவதையும், நாடு முழுவதும் முழுமையான நல்வாழ்வை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள குழந்தைகள், இளம்பருவப் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடையே நிலவும் மிகவும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இது இரத்த சோகை, வளர்ச்சி கண்காணிப்பு, ஊட்டச்சத்து ஈடேற்ற உணவு, போஷன் பி பதாய் பீ, சிறந்த ஆளுமைக்கானத் தொழில்நுட்பம் மற்றும் ஏக் பெட் மா கே நாம் உள்ளிட்ட முக்கிய கருப்பொருள்களில் கவனம் செலுத்தும்.