TNPSC Thervupettagam

7வது பொருளாதாரக் கணக்கெடுப்பு

December 19 , 2019 1676 days 624 0
  • 7வது பொருளாதாரக் கணக்கெடுப்பு (Economic Census - EC) 2019 ஆம் ஆண்டில் பொதுச் சேவை மையங்களின் (Common Service Centres - CSC) மூலம் நாடு தழுவிய அளவில் நடத்தப் படுகின்றது.
  • 7வது பொருளாதாரக் கணக்கெடுப்பானது மத்தியப் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் கீழ் மத்தியப் புள்ளிவிவர அலுவலகம் (Central Statistics Office - CSO) என்ற அமைப்பால் நடத்தப் படுகின்றது.
  • இந்தக் கணக்கெடுப்பு 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • பொருளாதாரக் கணக்கெடுப்பானது டிஜிட்டல் முறையில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தியப் பொருளாதாரக் கணக்கெடுப்பு

  • பொருளாதாரக் கணக்கெடுப்பு என்பது நாட்டின் புவியியல் எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்துப் பொருளாதார அமைப்புகளின் ஒரு முழுமையான கணக்கெடுப்பு  எண்ணிக்கையாகும்.
  • இந்தியப் பொருளாதாரக் கணக்கெடுப்பானது முதன்முதலில் 1977 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • இதுவரை 1977, 1980, 1990, 1998, 2005, 2013 ஆகிய ஆண்டுகளில் 6 பொருளாதாரக் கணக்கெடுப்புகள் நடத்தப் பட்டுள்ளன.
  • 1980 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட பொருளாதாரக் கணக்கெடுப்பானது மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஒருங்கிணைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்