TNPSC Thervupettagam

7 கரிம மாசுபடுத்திகளின் உறுதிப்படுத்துதல்

October 12 , 2020 1379 days 643 0
  • உறுதியான கரிம மாசுபடுத்திகள் (Persistent organic pollutants) குறித்த ஸ்டாக்ஹோம் மாநாட்டின் கீழ் பட்டியலிடப் பட்டுள்ள ஏழு வேதிமங்களை அங்கீகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • மேலும், அமைச்சரவை தனது ஒப்புதல் வழங்கும் அதிகாரங்களை மத்திய வெளியுறவுத் துறை விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு மாற்றி வழங்கியுள்ளது.
  • இந்த அமைச்சகங்கள் முன்பிருந்தே உள்நாட்டு விதிமுறைகளின் கீழ் உறுதியான கரிம மாசுபாடுகளை ஒழுங்குபடுத்தி வருகின்றன.
  • 7 உறுதியான கரிம மாசுபடுத்திகள்:
    • குளோர்டெகோன் (Chlordecone)
    • ஹெக்ஸாப்ரோமோபிபெனைல் (Hexabromobiphenyl)
    • ஹெக்ஸாப்ரோமோடிபெனைல் ஈதர் மற்றும் ஹெப்டாப்ரோமோடிபெனைல் ஈதர் (Hexabromodiphenyl ether and Heptabromodiphenyl ether) (வணிக ஆக்டா-பி.டி.இ)
    • டெட்ராப்ரோமோடிஃபெனைல் ஈதர் மற்றும் பென்டாப்ரோமோடிபெனைல் ஈதர் (Tetrabromodiphenyl ether and Pentabromodiphenyl ether) (வணிக பென்டா-பி.டி.இ)
    • பென்டாக்ளோரோபென்சீன் (Pentachlorobenzene)
    • ஹெக்ஸாப்ரோமோசைக்ளோடோடேகேன் (Hexabromocyclododecane) மற்றும்
    • ஹெக்ஸாக்ளோரோபுடாடைன் (Hexachlorobutadiene).

ஸ்டாக்ஹோம் மாநாடு

  • உறுதியான கரிம மாசுபடுத்திகள் குறித்த ஸ்டாக்ஹோம் மாநாடு 2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
  • இது சுற்றுச்சூழலையும் மனிதர்களையும் உறுதியான கரிம மாசுபாட்டிலிருந்துப் பாதுகாக்க வேண்டி கையெழுத்திடப்பட்ட ஓர் ஒப்பந்தம் ஆகும்.
  • உறுதியான கரிம மாசுபடுத்திகள் ஒளிச்சேர்க்கை, வேதியியல் மற்றும் உயிரியல் செயல்முறைகள் மூலம் சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்துவதை எதிர்த்து நிற்கின்ற கரிமக் கலவைப் பொருட்களாகும். .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்