உறுதியான கரிம மாசுபடுத்திகள் (Persistent organic pollutants) குறித்த ஸ்டாக்ஹோம் மாநாட்டின் கீழ் பட்டியலிடப் பட்டுள்ள ஏழு வேதிமங்களை அங்கீகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், அமைச்சரவை தனது ஒப்புதல் வழங்கும் அதிகாரங்களை மத்திய வெளியுறவுத் துறை விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு மாற்றி வழங்கியுள்ளது.
இந்த அமைச்சகங்கள் முன்பிருந்தே உள்நாட்டு விதிமுறைகளின் கீழ் உறுதியான கரிம மாசுபாடுகளை ஒழுங்குபடுத்தி வருகின்றன.
7 உறுதியான கரிம மாசுபடுத்திகள்:
குளோர்டெகோன் (Chlordecone)
ஹெக்ஸாப்ரோமோபிபெனைல் (Hexabromobiphenyl)
ஹெக்ஸாப்ரோமோடிபெனைல் ஈதர் மற்றும் ஹெப்டாப்ரோமோடிபெனைல் ஈதர் (Hexabromodiphenylether and Heptabromodiphenylether) (வணிக ஆக்டா-பி.டி.இ)
டெட்ராப்ரோமோடிஃபெனைல் ஈதர் மற்றும் பென்டாப்ரோமோடிபெனைல் ஈதர் (Tetrabromodiphenyl ether and Pentabromodiphenyl ether) (வணிக பென்டா-பி.டி.இ)
பென்டாக்ளோரோபென்சீன் (Pentachlorobenzene)
ஹெக்ஸாப்ரோமோசைக்ளோடோடேகேன் (Hexabromocyclododecane) மற்றும்
ஹெக்ஸாக்ளோரோபுடாடைன் (Hexachlorobutadiene).
ஸ்டாக்ஹோம் மாநாடு
உறுதியான கரிம மாசுபடுத்திகள் குறித்த ஸ்டாக்ஹோம் மாநாடு 2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
இது சுற்றுச்சூழலையும் மனிதர்களையும் உறுதியான கரிம மாசுபாட்டிலிருந்துப் பாதுகாக்க வேண்டி கையெழுத்திடப்பட்ட ஓர் ஒப்பந்தம் ஆகும்.
உறுதியான கரிம மாசுபடுத்திகள் ஒளிச்சேர்க்கை, வேதியியல் மற்றும் உயிரியல் செயல்முறைகள் மூலம் சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்துவதை எதிர்த்து நிற்கின்ற கரிமக் கலவைப் பொருட்களாகும். .