TNPSC Thervupettagam
December 24 , 2017 2571 days 963 0
  • 7-வது சர்வதேச இந்திய காபி திருவிழா 2018 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 16 முதல் 19 வரை பெங்களூருவில் நடைபெற உள்ளது.
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் காப்பிகளை உலகம் முழுவதும் பிரபலப்படுத்திடுவதற்காக நடத்தப்படும் இந்நான்கு நாள் திருவிழா இந்திய காபி அறக்கட்டளை (Indian Coffee Trust) மற்றும் இந்திய அரசின் காபி வாரியம் (Coffee Board) ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்படுகிறது.
  • 7-வது சர்வதேச காபி திருவிழாவானது 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் பெங்களூருவிலேயே நடைபெறவுள்ள சர்வதேச காபி நிறுவனத்தின் (International Coffee Organisation) உலக காபி மாநாட்டின் முன் நிகழ்வாகும்.
  • காபியா அராபிகா வகை காபித் தாவரங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கும் வெள்ளைத் தண்டு துளைப்பான் (White Stem Borer) போன்ற பூச்சிகளின் அச்சுறுத்தல்களுக்கு உயிர்தொழில்நுட்பவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் தீர்வு காண்பதற்காக காபி வாரியம் செயல்படுகின்றது.
  • காபி வெள்ளைத் தண்டு துளைப்பான் பூச்சிகளானது இந்தியாவின் அனைத்து காபி வளர்ப்பு இடங்களிலும் அராபிகா வகை காபிகளை தாக்கி அதன் உற்பத்தியை 40 சதவீதம் வரை குறைக்கும் தன்மையுடைய பூச்சியினங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்