இந்திய கிரிக்கெட் அணியின் உறுப்பினர்களான அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஷிவ் சத்ரபதி மாநில விளையாட்டு விருதுகள் மகாராஷ்டிரா அரசால் வழங்கப்பட்டுள்ளது.
ரோஹித் (2015-2016) மற்றும் ரஹானே (2016-2017) ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியமைக்காக (Outstanding Performance) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்விருவருக்கும் பதக்கம், சான்றிதழ், ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்டது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் ஆம்ரே 2016-2017 ஆண்டிற்கான பயிற்சியாளருக்கான விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதக்கம், சான்றிதழ், ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும்.